Breaking News

இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலி


கிளிநொச்சி, பச்சிலைப்பளை, தம்பகாம் பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் வீழ்ந்து இரண்டு குழந்தைகள் நேற்று சனிக்கிழமை  உயிரிழந்துள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனா்.


அதேயிடத்தை சேர்ந்த உதயசந்திரன் யஸ்மிதா (2 ½ வயது), யூலியஸ் டானியல் (ஒரு வயது) ஆகிய இரு குழந்தைகளே உயிரிழந்துள்ளது. மாலையில் வீட்டு வளவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும், வளவுக்குள் இருந்த நீர்நிரம்பிய குழிக்குள் வீழ்ந்துள்ளனா். பெற்றோர்கள் கவனிக்காத நிலையில் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனா். 

வீடு கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட குழியினுள்ளே குழந்தைகள் வீழ்ந்துள்ளனா். ஒன்றுவிட்ட சகோதரர்களான குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.