மஹிந்தவின் புதல்வருக்கு சொந்தமான சிறியரக விமானம் மீட்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருக்கு சொந்தமானதென கருதப்படும், மறைத்து வைக்கப்பட்ட இரண்டு ஆசனங்களை கொண்ட சிறிய ரக விமானமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறியரக விமானம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறியரக விமானமானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனால் கொள்வனவு செய்யப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, வெளிக்கள ஒளிபரப்புக்கு தேவையான உபகரணங்கள் சிலவும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








