Breaking News

தென்னாபிரிக்க மேற்கிந்திய தீவுகள் போட்டி

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.


இந்த போட்டி டேர்பனில் (Durban) இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப்பெற்றுள்ளது. இதன்படி, தற்போதைய நிலையிலேயே இந்த தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2 பூச்சியம் என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ஹெமில்டனில் (Hamilton) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.