Breaking News

தமிழர் பிரச்சினை பற்றி அவதானம் செலுத்தாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்

தற்போதைய அரசாங்கம் தமிழர் பிரச்சினை குறித்து அவதானம் செலுத்தவில்லையாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா வவுனியாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். 

வடக்கில் காணிகளை மீளெடுத்தல், காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் வடக்குத் தமிழர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.