மைத்திரி - ஸ்ரீ.சு.க சந்திப்பு இரத்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இன்று (15) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் பொருட்டு மைத்திரிபால சிறிசேன இந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








