Breaking News

என்னைப் பற்றிய செய்திகள் தவறானவை - பசில்

தன்னைப் பற்றிய செய்திகள் தவறானவை என்றும், விரைவில் அரசியல் செயற்பாடுகளில் மீண்டும் ஈடுபடவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர் தனது மனைவி சகிதம் நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.தற்போது அவர் அமெரிக்காவில் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தினூடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு பசில் ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் தான் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை என்றும், மிக விரைவில் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பற்றி நாட்டில் பரவி வரும் தகவல்களை கட்டுக்கதைகள் என்று வர்ணித்துள்ள பசில் ராஜபக்ஷ, மிக விரைவில் அனைத்துக்கும் உரிய முறையில் முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.