Breaking News

தேர்தல் கடமைகளின் போது பொலிஸாருக்கு துப்பாக்கிகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சேவையில் ஈடுபடுத்தப்படும் 61ஆயிரம் பொலிஸாருக்கும் ரி 56 ரக துப்பாக்கிகளை சேவையின் போது பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பொலிஸ் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தேவையேற்படின் நியாயமான அதிகாரத்தை பயன்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொதுமகன் ஒருவரின் வாக்குரிமையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் செயல்களின் போது நியாயமான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள முடியும்.இதேவேளை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 20 மக்கள் பிரதிநிதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.