Breaking News

பப்புவா நியூகினியாவில் உணவு தவிர்ப்பு போராட்டம் - இலங்கையர்களும் பங்கேற்பு

பப்புவா நியூகினியாவின் மானுஸ் தீவில் உள்ள அவுஸ்திரேலிய அகதி முகாமில் உள்ள நுற்றுக்கணக்கான அகதிகள் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் இலங்கையை சேர்ந்த அகதிகளும் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் வாயை திறக்க முடியாத படி இரண்டு உதடுகளை தைத்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லும் அகதிகள் பப்புவா நியூகினியாவில் உள்ள அகதி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.