அனைத்து மக்களிடமும் மன்னிப்புக் கோரியது பொதுபலசேனா
நாட்டு மக்கள் அனைவரிடமும் பொதுபலசேனா மன்னிப்புக்கோரியுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் படி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முன்னிலை வகிக்கின்றார்.
இந்தநிலையில் 2மணித்தியாலங்களுக்கு முன்னர் நாட்டுமக்களை பாதிக்கின்ற வகையில் தாங்கள் செயற்பட்டிருந்தால் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கோருகின்றோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவித்தலை பொதுபலசேனா தனது ருவிட்டரில் பதிவு செய்துள்ளது. மேலும் சமாதானமான சமூகத்தை உருவாக்க மைத்திரிபால சிறிசேனவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அதற்கான ஒத்துழைப்புகளையும் வழங்குவோம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற பல்வேறு அசம்பாவிதங்களுக்கு பொதுபலசேனா காரணமாகவிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.








