யாழ்.வருகின்றார் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதே அவரது வருகையின் நோக்கம் மைத்திரி அரசு பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள புதிய தேசியப் பாதுகாப்புத் திட்டத்துடன் தொடர்புபட்டதாக வடக்கின் நிலைமை குறித்து அவர் இங்கு ஆராய்வார்.
மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாமல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கம் நிலப்பகுதிகளில் மீள்குடியமர்வு குறித்து ஆராய்வதும் அவரது பயணத்தின் ஒருபகுதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.