Breaking News

வடக்கு ஆளுநர் பதவியேற்பு ! ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

வடக்கு மாகாண ஆளுநராக பளிஹக்கார இன்று பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 

 சாதாரண நிகழ்வாகவே இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெறுவதன் காரணமாக இந்த நிகழ்வுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இன்று 9.20 மணியளவில் வட மாகாண ஆளுநராக பளிஹக்கார பதவியேற்றுக் கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.