100 நாள் வேலைத்திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கணிப்பு!
100 நாள் வேலைத் திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கணிப்பு நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் பங்கேற்புடன் மிகவும் பயன்மிக்க, வினைத்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வகையில் இந்த வேலைத் திட்டத்தினை வெற்றி பெறச் செய்வதே இதன் நோக்கமாகும் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த வேலைத் திட்டம் தொடர்பான பூரணமான விபரங்கள், தகவல்கள் மற்றும் அதன் தற்போதைய நிலைமை என்பவற்றை www.pmm.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான உங்களது கருத்துக்கள், விமர்சனங்கள், பிரேரணைகள், குற்றச்சாட்டுக்களை பணிப்பாளர் நாயகம், செயற்றிட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கிக் கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 எனும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும்.
இணையத்தளத்தின் ஊடாக தெரிவிப்பதாயின் 100dayfeedback@pmm.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தெரிவிக்கலாம். தொலைபேசி ஊடாக தெரிவிப்பதாயின் 0112477915 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் - இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.