மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருட சிறை
2012ம் ஆண்டு அவர் ஜனாதிபதியாக இருந்த போது, மாலைத்தீவின் முன்னாள் பிரதம நீதியரசரை ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டமைக்கு எதிராக, அவர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் மீதான விசாரணையை அந்த நாட்டின் மூன்ற பேர் கொண்ட நீதிபதிகள் குழு நடத்திய நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. காரணம் இன்றி பிரதம நீதியரசரை கைது செய்வதற்கான உத்தரவை மொஹட் நசீட் வழங்கியமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. இதனை அடுத்து அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.








