Breaking News

ரணிலிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர நடவடிக்கை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி ஒப்பந்த பத்திர மோசடி, பிணைமுறிகள் தொடர்பான முறைகேடுகள் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடி வருவதாக மேலும் கூறப்படுகின்றது.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கும் நோக்கில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இந்த முயற்சிகளுக்கு அரச சார்பிலுள்ள அமைச்சர்கள் இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.