ஜேர்மன் நாட்டு விமான விபத்தில் 150 பேர் உயிரிழப்பு! (காணொளிகள் இணைப்பு)
ஜேர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜேர்மன் விங்ஸின் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 150 பேர்வரை உயிரிழந்திருப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் 144 பயணிகளும் 6 விமானப்பணியாளர்களும் இருந்தனர் எனவும், விமான விபத்தில் யாரும் உயிர்தப்பியிருக்க வாய்ப்பில்லை என்றும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டுசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின்லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிக்ஞை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன. இறந்தவர்களில் பெரும்பாலோனோர் ஸ்பெயின் மற்றும் ஜேர்மனிய தேசத்தவர்கள். என தெரிவிக்கப்படுகின்றது.