Breaking News

மீனவர்களுக்கிடையிலான பேச்சுக்கு இலங்கை அரசு இணக்கம்

இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ஜோசப் மைக்கேல் பெரேராவை நேற்று சந்தித்தித்தபோது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, மீனவர் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையை 12ஆம் திகதி தொடங்க வேண்டுமென வை.கே.சின்ஹா கோரிக்கை விடுத்திருந்தார்.

வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அங்குள்ள மதத் தலைவர்களை சந்தித்துப் பேசுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்தியாவில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல், எல்லையைத் தாண்டிய சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எல்லையைத் தாண்டிய குற்றச்சாட்டில் கடந்த மாதத்தில் மாத்திரம் 86 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு, அவர்களது 10 மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.