விமான விவகாரம்! யோசித ராஜபக்சவிடம் இன்று விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சகோதரர் நாமல் ராஜபக்சவுடன் சென்ற யோசித ராஜபக்சவிடம், காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இன்று காலை 8.40 மணி தொடக்கம், 10.40 மணி வரை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த விசாரணை இடம்பெற்றது.
கடந்த ஜனவரி 13ம் நாள் நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார நிலையத்தில் இலகுரக விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டது.








