வடக்கு ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - சர்வதேச ஊடக அமையம்
நாடு முழுவதும் குறிப்பாக வடக்கில் கடத்தப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பாக திறந்த விசாரணை ஒன்றை மேற்கொள்வதக்கு சர்வதேசம் ஊடாக இலங்கை மீது அழுத்தம் கொடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடக அமையம் தெரிவித்ததுள்ளது.
யாழ். ஊடக மையத்தில் சர்வதேச ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நேற்று ஊடக சந்திப்பொன்றினை நடத்தினர். அங்கு கருத்து தெரிவித்த சர்வதேச ஊடக அமையத்தின் அவுஸ்ரேலிய பிரதிநிதி கிறிஸ்ரோபர் வோறன் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2000ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் 12 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பாக இதுவரை யாரும் பொறுப்பு கூறவில்லை. இது விடயம் தொடர்பான திறந்த விசாரணை ஒன்றை நடாத்துமாறு சர்வதேசத்திடம் கோரவுள்ளோம். பத்திரிகை நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். தற்போது அனைத்து ஊடகங்களும் போதிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றன.
ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டமை மற்றும் கடத்தப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையை இலங்கை அரசிடம் வலியுறுத்துவீர்களா? என்ற கேள்விக்கு 'இது தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டுவருவது மட்டுமல்லாது இலங்கை அரசின் கவனத்துக்கும் கொண்டு வருவோம். ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் அவர்களை நேரில் எதிர்கொள்ள துணிச்சலற்று கொலை செய்துள்ளனர்இ கட்டாயம் இதை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு வருவோம். இறுதி யுத்தத்தில் காணாமற்போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் மனித உரிமை மீறல் என்ற வகையில் அவர்கள் தொடர்பாக கவனத்தில் கொள்வோம் என்றார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச ஊடக அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்ரோபர் வோறன் மற்றும் ஸ்கோற்கிறிவென், இந்தியாவை சேர்ந்த சித்தார்த் வரதராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். இச் சந்திப்பில் வடக்கின் தற்போதைய சூழ் நிலைகள் பற்றியும் யாழ்.ஊடகவியலாலர்களிடமிருந்து கேட்டறிந்து கொண்டனர்.