Breaking News

கடற்பரப்பை பகிர்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா? வீரவன்ச கேள்வி

பொது தேர்தலின் பின்னர், வடக்கு கடற்பரப்பை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் முன் எடுக்கப்படுகின்றதா? என தேசிய சுதந்திர முன்னணி நேற்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதன் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நியமிப்பதற்காக, எதிர்வரும் ஆறாம் திகதி கண்டியில் இடம் பெறவுள்ள மக்கள் சந்திப்பு தொடர்பாகவே இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது, நாட்டையே ஏமாற்றியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய, முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அரசாங்கம் காலனித்துவ தன்மையுடன் தமக்கேற்ற வகையில் செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.