கிழக்கு விவகாரம்! சம்பந்தனை நாடினார் பிள்ளையான் (படங்கள் இணைப்பு)
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கிய ஆதரவினை மீளப் பெற்றுக் கொண்ட உறுப்பினர்கள் சிலர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கிழக்கில் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக இவர்கள் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான், அக்கட்சியின் செயலாளர் பிரசாந்தன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
மேலும் கூட்டமைப்பிற்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.









