வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)
காணாமற்போனோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு பூராகவும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று நடைத்தப்பட்டது.
போர்க்குற்றம் குறித்த உள்நாட்டு விசாரணை நீதியை தேடித்தராது என்று குறிப்பிட்டும், காணாமற்போனவர்கள் குறித்து அரசு உடனடியாகத் தீர்வை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அரச செயலகத்துக்கு முன்பாக திரண்ட, காணாமற்போனோரின் உறவுகள், பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.