ஊழல் மோசடிகளால் நாடு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது!
ஊழல் மோசடிகளால் நாடு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் நினைவு நாளில் கலந்துகொண்ட போதே நரேந்திர மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி கூறியதை முதலில் மக்கள் நம்பவில்லை எனக் குறிப்பிட்ட அவர்,
இவ்வாறான பெரிய இழப்புகளை ஏற்படுத்தி விட்டு, எந்த பாதிப்பும் நடக்கவில்லை என சிலர் கூறிவருவதாக அவர் கூறியுள்ளார். ஆனால், மொத்தமுள்ள 204 சுரங்கங்களில், 18 சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டதனாலே 2 லட்சத்திற்கும் அதிகமாக வருவாய் கிடைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








