Breaking News

ரயிலில் மோதிப் படுகாயமடைந்த யாழ்.இந்து மாணவன் சாவு!

யாழ்.பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு 7.10 மணியளவில் பாதுகாப்பற்ற வீதிக் கடவையைக் கடக்க முற்பட்ட சமயம் ரயில் மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பயனின்றி நேற்று கொழும்பில் உயிரிழந்தார். 


யாழ்.இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கற்கும் கோப்பாயைச் சேர்ந்த குகப்பிரியன் (வயது-18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.