முறைகேடுகள் தொடர்பில் விசாரணை!
கடந்த மாதத்தில் இடம் பெற்ற மத்திய வங்கியின் 30வது முறிகள் தொடர்பான ஏல விற்பனையின் போது, இடம் பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ ஆகியோருக்கிடையே இடம் பெற்ற தொலைபேசி கலந்துரையாடலில் பின்னர், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காமினி பிடிபன குழுவின் தலைவராகவும், மஹேஸ் களுகம்பிட்டிய மற்றும் சந்திமால் மெண்டிஸ் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த முறைகேடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்பிப்பதே அந்த குழுவின் பொறுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.