பசில் தலைமறைவு! தேடுதல் ஆரம்பம்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தற்பொழுது வியட்நாமில் தேடிவருவதாக கொள்கை அமுலாக்கம் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவை அமெரிக்காவில் தேடிப்பார்த்ததாகவும் அவர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் கொள்ளையடிப்பதை நிறுத்துவதாகவும் அவ்வாறான செயல்களுக்கு இடமளிக்காத நல்லாட்சியொன்றை வழங்குவதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.