சுதந்திர கட்சியில் மகிந்தவிற்கு இடமில்லை! ஜனாதிபதி தெரிவிப்பு
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பாளராக களம் இறங்க இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற இரவு விருந்துபசார நிகழ்வில் கலந்துக்கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் குறித்த நிகழ்வில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும், ஆதரவு வழங்கியவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.








