Breaking News

யாழில் காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம்! (படங்கள் இணைப்பு)

காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று முற்பகல் யாழ்.மாட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். போராட்டத்தின் முடிவில் காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி வட பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போன பொதுமக்கள் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

 அதில் கலந்து கொண்ட உறவுகள் காணாமல் போன தங்களின் உறவினர்களை மீட்டுத்தாருங்கள் எனக்கோரி போராட்டத்தினை மேற்கொண்டனர். 

இப்போராட்டத்தின் முடிவில் அனைவரும் இணைந்து மாவட்ட செயலகத்திற்குச் சென்று தங்கள் உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியும் ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தித் தருமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கான மகஜரை வழங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரிடமும் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .