வட மாகாண சபையின் நிபுணர் குழு அறிக்கையில் பல சந்தேகங்கள் - மணிவண்ணன் குற்றச்சாட்டு
வட மாகாண சபையின் நிபுணர் குழுவினால், வெளியிடப்பட்ட அறிக்கை இனத்தினை அளிப்பதற்கான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதென சட்டத்தரணி வ.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், வலி வடக்கு பகுதியில் உள்ள கிணறுகளின் நீர் பருகலாம் என வெளியிடப்பட்ட அறிக்கையைில், 150 கிணறுகளின் 226 நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் 116 கிணறுகளில், கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அந்த நீரை பருக முடியாதென நிருபர் குழு அறிவித்திருந்தது.
வட மாகாண சபையினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆய்வு அறிக்கையில், பருக முடியாத அளவிற்கு நீர் மாசுபடவில்லை என்ற தோற்றப்பாட்டினை வெளிப்படுத்த கூடிய இடைக்கால அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். நிபுணர் குழு கிணறுகளை முழுமையாக ஆய்வு செய்யாமல், அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வலிகாமம் பகுதியில் 1000 கிணறுகளில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
எந்தெந்த கிணறுகளில் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. எவ்வளவு எடுக்கப்பட்டன என்பது பற்றி நிபுணர் குழு வெளியிடவில்லை. அந்த பகுதியில் உள்ள கிணறுகள் அனைத்தும் பரிசோதனைக்குட்படுத்தி, அதில் உயிர் ஆபத்துக்கள் ஏற்படுத்தும், நஞ்சு இரசாயணங்கள் கலக்கப்படவில்லை என முழுமையான அறிக்கை வெளியிடப்படும் பட்சத்தில் மட்டுமே, அந்த பகுதி மக்களை அந்த நீரைப்பருகுமாறு கூற முடியும்.
அதுவரையில், வலி. வடக்கு பகுதியில் உள்ள மக்கள் உங்கள் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளன. அல்லது, கிணறு மாசடைந்துள்ளதென நினைத்தால், அந்த நீரைப் பருக வேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வட மாகாண சபையின் நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கையின் பிரகாரம் குடிநீர் பருக முடியுமென்று, பருக முடியாத அளவிற்கு நஞ்சு பதார்த்தங்கள் கலந்திருக்கவில்லை என, அந்த அறிக்கையினை நம்பி மக்கள் தற்போது அந்த குடிநீரை பருக வேண்டாமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
மூன்றாம் தரப்பின் ஆய்வு ஒன்று தேவைப்படுகின்ற காரணத்தினால், மூன்றாம் தரப்பின் ஆய்வு அறிக்கை வரும் வரையில் அந்த குடிநீரைப்பருகுவது நல்லதல்ல.
வட மாகாண சபையின் நிபுணர் குழு அறிக்கையில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. அவசர அவசரமாக வட மாகாண சபையின் நிபுணர் குழு இடைக்கால அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
கிணறுகளில் எங்கு மூலக்குறுகள் எடுத்தார்கள் என்றும் வெளியிடப்படவில்லை. தெளிவான அறிக்கை வெளியிடும் வரையில் வலி.வடக்கு பகுதியில் கிணறுகளில் கழிவு ஒயில் கலக்கப்பட்ட கிணறுகளில் குடிநீர் பருகுவதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்ததுடன், தற்போது, குடிநீர் வழங்கும் பிரதேச சபைகள் குடிநீர் வழங்குவதை நிறுத்திக் கொண்டால், தமிழ் தேசிய மக்கள் முண்னணியிராகிய தாம் அந்த மக்களுக்கு குடிநீர் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.