Breaking News

மேற்கிந்திய அணியை கலங்கடித்த மார்டின் கப்டில்

உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டில் 200 ஓட்டங்களைக் கடந்தார்.


மேலும் இதன் மூலம் சாதனைகளையும் நிலைநாட்டினார். அவர் 152 பந்துகளில் 203 ஓட்டங்களைக் கடந்ததுடன், இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 163 பந்துகளில் 237 ஓட்டங்களைப் பெற்றார். இதில் '24' நான்கு ஓட்டங்களும் , '11' ஆறு ஓட்டங்களும் அடங்குகின்றது.


இதன் மூலம் உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக அவர் பதிவானார். அதுமட்டுமன்றி உலகக் கிண்ண போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்டம் இதுவாகும்.  இதுமட்டுமன்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதத்தைக் கடந்த முதல் நியூசிலாந்து வீரராக இவர் பதிவானார்.