இலங்கை - இந்திய மீனவர் பேச்சுவார்த்தை உறுதி
எதிர்வரும் 24ம் திகதி தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. தமிழக அரசாங்கம் இந்த திகதியில் பேச்சுவார்த்தை நடத்த கோரி இருந்தது. இதற்கு இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் உடன்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 24ம் திகதி சென்னையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.