கடத்தல்கள் தொடர்பில் கடற்படையினரிடமிருந்து பல தகவல்கள் அம்பலம்!
2008 மற்றும் 2009ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடற்படையினரிடம் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இதன்மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த கடத்தல்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொடவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் கடத்தல்கள் தொடர்பில் சந்தேகங்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திருகோணமலையில் சில இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது காணாமல் போனமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.








