Breaking News

அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை அணி

உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணிக்கு வீரர்கள் தொடர்ந்து உபாதைகளுக்குள்ளாவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

தம்மிக்க பிரசாத், ஜீவன் மெண்டிஸ் , திமுத் கருணாரத்ன , ரங்கன ஹேரத் , இறுதியாக சந்திமால் என ஐந்து வீரர்கள் இதுவரை காயமடைந்துள்ளனர். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சந்திமால் காயத்துக்கு உள்ளானார். இவருக்கு பதிலாக குஷல் ஜனித் பெரேராவை அணியில் இணைப்பதற்கு ஐ.சி.சி. தற்போது அனுமதியளித்துள்ளது.

துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன காயமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக சீக்குகே பிரசன்ன அணியில் இணைக்கப்பட்டார். அதேபோல் ஜீவன் மெண்டிஸ் மற்றும் தம்மிக்க பிரசாத் ஆகியோரும் காயம் காரணமாக தாயகம் திரும்பியுள்ளனர்.

இதேவேளை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தொடர்ந்து விளையாடுவதும் கேள்விக்குறியாகவுள்ளது. அவர் காயத்திலிருந்து மீண்டு வருவதாகவும் காலிறுதிப் போட்டியில் விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது இதுவரை உறுதியாகவில்லை.

தொடர்ச்சியாக வீரர்கள் காயத்துக்கு உள்ளாகி வருகின்றமை இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.இதனால் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பும் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது அணியின் சமநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அணியின் பயிற்றுவிப்பாளரான மாவன் அத்தபத்துவும் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார். அணியின் வீரர்கள் மாற்றப்படுவது அணிக்கு பாரிய இழப்பென அத்தபத்து சுட்டிக்காட்டியுள்ளார்.