Breaking News

19ம், 20ம் திருத்தச் சட்டங்களுக்கு ஜாதிக ஹெல உறுமய ஆதரவு



19ம், 20ம் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவளிக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.

19ம் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி முன்னதாக தெரிவித்திருந்தது.எனினும், 19ம், 20ம் திருத்தச் சட்டங்களுக்கு பூரண ஆதவரளிக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.19ம் திருத்தச் சட்டத்திற்கும் 20ம் திருத்தச் சட்டத்திற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.