தமிழக தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு - 20 பேர் பலி
ஆந்திராவில் அம்மாநில பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்தாக இந்திய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆந்திர மாநிலம், திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் ஈத்தங்காயப்பள்ளியில் தமிழக தொழிலாளர்கள் மரம் வெட்டுவதாக அம்மாநில பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆந்திர மாநில பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர்கள் பொலிசார் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் கல்வீசி தாக்கியதில் இரண்டு பொலிசார் படுகாயம் அடைந்ததாகவும், இதையடுத்து பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் தமிழக தொழிலளார்கள் 20 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.








