Breaking News

கூட்டமைப்பு இன்று கலந்துரையாடல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, இன்றை தினம் முதற்கட்ட பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தை இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் போது, அந்த கட்சிக்காக யாப்பு மற்றும் கொள்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

இதனிடையே, கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மூன்று கட்சிகள் தற்போதைய நிலையில் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.