Breaking News

சல்மான்கான் மீது தொடரப்பட்ட வழக்கில் மே 6-ந் தேதி தீர்ப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் (49) கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை, பாந்த்ரா பகுதியில் ஓட்டி வந்த டொயாட்டோ லேண்ட் குரூசர் கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது.

இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்ப்புக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் மே-6ந்தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அவருக்கு பத்து வருட சிறை தண்டனை வரை கிடைக்கும். இந்த வழக்கில் ஆதாரங்களும், சாட்சியங்களும் சல்மானுக்கு எதிராக உள்ளதால் அவருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.