முல்லை மின்சாரசபையினரின் அசமந்தபோக்கு மக்கள் அவலநிலை
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மிகவும் பிரச்னையாக
உள்ளது மின்சாரபிரச்னை 100 நாள் வேலை திட்டத்தில் மைத்திரி அரசாங்கம் கூறிஉள்ளது அனைவருக்கும் மின்சாரம் ஆனால் இங்கு நடப்பது வேறு
முல்லைத்தீவு மின்சாரசபையினர் மக்களை வாட்டி வதைக்கும் செயல் மக்கள் மிகவும் வேதனையும் மனஉளைச்சலும் அடைந்து உள்ளனர்.
மக்கள் தங்கள் வீடுக்கு தேவையான மின்சாரஇணைப்பை பெற்றுகொள்வதற்கான விண்ணப்பப்படிவம் திங்கள்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே வழங்கமுடியும்.
இவ்வாறு விண்ணப்பப்படிவம் வழங்க முல்லைத்தீவு மின்சாரசவை அலுவலகத்துக்குச்செல்லும் மக்களை மின்சாரசவையினர் காலை 8 மணியில் இருந்து மாலை 2 மணிவரை அலுவலக வாசலில் மக்களை காவல் காக்க வைத்து விட்டு விண்ணப்பப்படிவம் பெறவேண்டிய அதிகாரிகள் மக்களை கண்டு கொள்ளாமல் அவர்கள் தொலைபேசியும் கையுமாக இருந்து விட்டு 2 மணிக்கு பின்பு தான் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்கிறார்கள்.
இவர்களின் இவ்வாறான செய்ல்பாடுகளால் மக்கள் அவலநிலைக்கு உள்ளாகியுள்ளனர் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படஉதவி-கேசவன்











