உதயசிறியின் விடுதலை தொடர்பாக எந்தவொரு அறிவித்தலும் வரவில்லையாம் ?
தனது மகளை கடந்த வியாழக்கிழமை சிறைச்சாலைக்கு சென்று தாயார் பார்வையிட்டுள்ளார்.அதன்போது உதயசிறியின் விடுதலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இது தொடர்பாகஎந்தவொரு அறிவித்தலும் அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வரவில்லை எனதெரிவித்துள்ளனர்.
சிகிரியா சுவரில் எழுதிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்புவழங்கியுள்ளார். இருந்தபோதிலும் அவரது விடுதலை தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு வருவதாகஉதயசிறியின் தாயார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறைச்சாலைக்கு சென்ற போது மகளுக்காக கொண்டு சென்ற எந்த உணவுப் பொருளையும்உள்ளே கொண்டு செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவுமில்லை என தாயார் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நீண்ட நாள் விடுமுறை காரணமாக ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு குறித்த கடிதம்,சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அனுப்ப தாமதிக்கப்பட்டது. எதிர்வரும் வாரத்தில் அவரைவிடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஷிரால்லக்திலக கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.