ரசிகர் மன்றம் விஷால் நற்பணி இயக்கமாக மாற்றம்!
என் ரசிகர் மன்றம் இனி ‘அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்‘ என்று மாற்றப்படுகிறது.
வேகம், விவேகம், விடாமுயற்சி இதன் கொள்கைகள். பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். முதலில் மனதில் தோன்றிய விஷயம் இது. பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் பெண் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதில்லை என்று தெரிகிறது. அப்படிப்பட்ட வசதிகள் செய்து தருவது ஒரு திட்டம்.
நன்றாகப் படிக்கும் மாணவிகள் கல்லூரிக்குச் சென்று படிக்க உதவுவது இப்படி பல திட்டங்கள் இருக்கின்றன. போகப்போக படிப்படியாக இது விரிவடையும். இப்படி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு தேவை உள்ளவர்களுக்கு நாம் செய்கிற உதவி போகவேண்டும். இதில் தகவல் தொடர்பு சிக்கல் வரக்கூடாது.
அதனால் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனி நிர்வாகிகள். தங்கள் பகுதியில் இப்படி தேவைப்படுவோரை தேர்ந்தெடுத்து எங்களுக்கு தருவார்கள். தகுதியறிந்து உதவ நான் தயார். இதுநாள் வரை நான் தனியாகவும் ரசிகர்கள் ஒரு பக்கம் தனியாகவும் செய்து வந்த நல்ல காரியங்களை இனி இணைந்து முழு சக்தியுடன் செய்ய இருக்கிறோம்.
முறைப்படுத்தல் அவசியம் எனப்பட்டது. இனியும் சுதாரிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று முடிவு செய்தேன். எனவே இந்த மாற்றங்களை செய்தேன். இதற்காக தனி இணையதளம் தொடங்கியுள்ளேன். இது முழுக்க சமூக நற்பணி சார்ந்தது இதில் அரசியல் ஈடுபாடோ, நோக்கமோ எதுவுமில்லை. கேரளா, பெங்களூரிலும் இம்மன்றங்கள் செயல்படும். மாதாமாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுக்க ஒதுக்குவேன்.என்றும் தெரிவித்துள்ளார்








