Breaking News

மகிந்தவின் வாக்குகள் சரிவு

மகிந்த ராஜபக்சவின் வாக்குகள் சரிவடைந் துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தலில் மகிந்த 58 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். எனினும் தற்போது 20 லட்சம் வாக்குகள் வரையில் குறைவடைந்திருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தம்முடன் கூடவே இருந்தவர்கள் தமக்கு குழி பறித்து விட்டார்கள் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி மற்றும் வீட்டில் உணவு சுவைஞராக கடமையாற்றியவர் ஆகியோர் தமக்கு எதிராக செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இவர்கள், புதிய அரசின் சார்பில் தம்மையும் தமது குடும்பத்தினரையும் உளவு பார்த்தனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது பாதுகாப்பிற்கு பொறுப்பாக செயற்பட்டு வரும் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, உளவுத் தகவல்களை புதிய அரசிற்கு வழங்கியதாக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி வரையில் தமது அனைத்து செயற்பாடுகளையும் கண்காணித்து உளவுத் தகவல்களை, புதிய அரசிற்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.