சங்கா, மஹெலவின் இடைவெளி - அஞ்சலோ
இலங்கை கிரிக்கட் அணியில் இருந்து குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்ன ஆகியோர் விலகியுள்ளமை, மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருப்பதாக, அணித் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். சங்கக்கார மற்றும் ஜெயவர்தனவின் இடைவெளிகள் நிரப்ப முடியாதவை.
ஆனாலும் இலங்கை கிரிக்கட் அணியில் தற்போதுள்ள இளம் வீரர்கள் குறித்து நம்பிக்கை இருக்கிறது. அடுத்த உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. இந்த நிலையில் இளம் வீரர்களை கொண்டு இந்த இடைவெளியை மீள்நிரப்ப முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.