Breaking News

இரண்டு நாட்களில் 286 கோடிக்கும் வசூல் செய்த அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான்!

ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர், அயன்மேன் என்று பல சூப்பர் ஹீரோக்கள் ரவுண்டு கட்டி ரகளை செய்யும் படம் தான் ’அவெஞ்சர்ஸ்’. 2012-ல் இதன் முதல் பாகமான ’அவெஞ்சர்ஸ் அசம்பிள்’ வெளியாகி பாராட்டிலும், வசூலிலும் சக்கை போடு போட்டது.

இந்த சீரிஸின் இரண்டாவது பாகமான, ’அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ இந்தியாவில் நேற்று வெளியானது. ’ஸச் எ மைண்ட் ப்ளோயிங் மூவி’ என்று இங்கிலீஷ் பீட்டர்களும், ’ஹல்க் கலக்கிட்டாம்பா’ என்று லோக்கல் ஆடியன்சும் ஒரு சேர இந்தப் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

சுருக்கமாக முதல் பாகத்தைவிட இரண்டாவது பாகம் இன்னும் சிறப்பாகவே வந்திருப்பதாகவே படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருதுகிறார்கள். வெளியான இரண்டே நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள அவெஞ்சர்ஸ்-2. இன்னும் 2 நாட்களில் (வார விடுமுறை என்பதால்) வசூலில் 1020 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.