பிவிபி சினிமாவின் கிரகணம்
வித்தியாசமான கதைகளை எடுத்து ரசிகர்களை மகிழ்விப்பதில் பிவிபி சினிமா தயாரிப்பு நிறுவனம் முதன்மை இடத்தை பிடிதுள்ளது.
புதுமைக்கு பேர்போன பிவிபி சினிமா அறிமுக இயக்குனர் இளன் இயக்கும் ‘கிரகணம்’ திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. தயாரிப்பாளர்களின் ஆதர்ஷ நாயகனான கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், புதுமுகம் நந்தினி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் மற்றும் கருணாஸ் , கருணாகரன் ‘கயல்’ சந்திரன் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
“ ‘கிரகணம்’ கோள்களின் இடமாற்றம் என்று சிலரும், ஒவ்வொரு மனிதனின் நல்லதும், கேட்டதும் இதை மையாமாகக் கொண்டே அமைகிறது என்று சிலரும் நம்புவது உண்டு. அவ்வகையில் சந்திர கிரகணத்தால் சிலரது வாழ்க்கையில் ஏற்படும் நல்லது கேட்டதை சுவாரஸ்யமாக சித்தரிக்கும் திரைப்படம் ‘கிரகணம்’. பிவிபி சினிமா தயாரிப்பில் என்னுடைய முதல் படத்தி இயக்குவதில் மிக சந்தோஷமாக உள்ளது.
மேலும், இப்படத்தின் படபிடிப்புகள் மிக விரைவில் ஆரம்பமாக உள்ளது.“,எனக் கூறினார் அறிமுக இயக்குனர் இளன். முழுக்க முழுக்க இளைஞகர்களை கொண்டுள்ளது ‘கிரகணம்’ படக் குழு. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றுகிறார். சுந்தர மூர்த்தி மிக அருமையான பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து இருக்கிறார்.
நேர்த்தியான படத்தொகுப்பு வேலைகளை மணி குமரன் மேற்கொள்கிறார். IB கார்த்திகேயன் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்ள , சசி குமார் நிர்வாக தயாரிப்பு பணியை மேற்கொள்ள, பிக் ப்ரின்ட் பிக்சர் சார்பில் ஷோபன் பாபு தயாரிப்பு பணிகளை மேற்கொள்கிறார். பரம் V பொட்லூரி இப்படத்தை தயாரிக்கிறார்