Breaking News

மீண்டும் அணியில் அஜ்மல்

பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

பங்களாதேஸ் அணிக்கு எதிராக இந்த மாதம் 17ம் திகதி ஆரம்பமாகின்ற தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் அவர் இணைக்கப்பட்டுள்ளார். பந்துகளை வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த அவருக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தடைவிதித்திருந்த போதும், பந்துவீச்சு திருத்தங்களின் பின்னர் அவருக்கான தடையை சர்வதேச கிரிக்கட் பேரவை நீக்கியிருந்தது.

தடைநீக்கத்தின் பின்னர் அவரை உலக கிண்ண கிரிக்கட் தொடரில் பங்குபெற செய்ய முயற்சிக்கப்பட்ட போதும், அது சாத்தியப்பட்டிராத நிலையில், தற்போது முதல் தடவையாக அவர் பாகிஸ்தான் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.