Breaking News

''சுன்னாகம் தகிக்கும் தண்ணீர்'' ஆவணப்படம் வெளியீடு நாளை! (காணொளி இணைப்பு)


சுன்னாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளினில் நிலத்தடி நீர் நஞ்சூட்டப்பட்டமை தொடர்பிலான விழிப்புணர்வை அனைத்து மட்டங்களினில் ஏற்படுத்தவும் உண்மையை வெளிக்கொணரவும் ஊடகவியலாளர்கள் குழுமத்தினால் உருவாக்கப் பட்ட தகிக்கும் தண்ணீர் ஆவணப்படம் நாளை  வெள்ளிக்கிழமை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

சுன்னாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளினில் நிலத்தடி நீர் நஞ்சூட்டப்பட்டுள்ளமை உறுதியாகி வருகின்ற நிலையினில் யாழ்.ஊடக அமையத்தின் அனுசரணையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வாவணப்படம் அண்மைக்காலங்களினில் வடக்கில் தயாரிக்கப்பட்டுள்ள விடயம் சார் ஆவணப்படங்களினில் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.யாழ்ப்பாணத்தின் முன்னணி இளம் ஊடகவியலாளர்களுள் ஒருவரான ஜெராவின் நெறியாள்கையினில் இவ் ஆவணப்படம் தயாராகியுள்ளது.

தமக்கான தூயகுடிநீர் வேண்டி மக்கள் போராட்டம் முனைப்பு பெற்ற சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் மணிமண்டபத்தினில் இடம்பெறும் நிகழ்வினில் மக்களிற்கான மருத்துவ ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையினில் வைத்தியகலாநிதிகள் முரளி வல்லிபுரநாதன் மற்றும் குமரேந்திரன் ஆகியோர்  உரையாற்றவுள்ளனர்..

பிற்பகல் 4.00மணிக்கு இடம்பெறும் வெளியீடு மற்றும் கலந்துரையாடலில் கலந்து கொள்ள அனைவரிற்கும் யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.