Breaking News

வடமாகாண சபையில் தொலைபேசி பாவிக்கத் தடை

வடமாகாண சபை அமர்வு நாட்களில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். கைதடியில் அமைந்துள்ள மாகாண சபைக்கட்டடத்தில் வடமாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது உரையாற்றிய வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், மாகாண சபை அவைக்கான ஒழுங்கு விதிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.