புலம்பெயர் தமிழ் அமைப்பைச் சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்
மெரிக்காவின், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை (U.S. Tamil Political Action Council) என்ற புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகளுடனேயே அவர் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். இன்னர்சிற்றி பிரஸ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை, கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவது ஆறுமாதங்களுக்குப் பிற்போடப்பட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.








