நாட்டில் ஏற்பட்ட குழப்பத்திற்கு சந்திரிக்காவே காரணம் - கெஹலிய குற்றச்சாட்டு
நாட்டில் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவே பொறுப்பு. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி பிளவடைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரது செயற்பாடுகள் குறித்து முன்னாள் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். சோமவன்ச அமரசிங்க எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது. சோமவன்ச அமரசிங்க, ரோஹன விஜேவீரவின் கொள்கைகளே பின்பற்றி வருகின்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவின் நடவடிக்கைகள் ஐந்து சதத்திற்கேனும் பயனற்றது என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய தொலைபேசி ஊடாக பத்திரிகை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.








