அம்பாறையில் தொடரும் விசாரணைகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும்
உள்நாட்டு விசாரணையை நிராகரித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
ஐனாதிபதி ஆணைக்குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த காணாமற்போனோரின் உறவினர்கள், சர்வதேச விசாரணையூடாக தமது உறவுகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளின் மூன்றாம் நாள் அமர்வு நேற்று அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பகுதியில் இடம்பெற்றது. இதன்போது 195 பேர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்திருந்ததுடன் 188 புதிய முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இன்றைய தினமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக சாட்சியப் பதிவுகள் இடம்பெற்றவேளையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








