Breaking News

நீதிமன்ற தாக்குதல் தொடர்பில் கைதாகிய 130 பேரும் வவுனியா, அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

நீதிமன்றம் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டமை,சிறைச்சாலை வாகனம்,சட்டத்தரணி வாகனம் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொருக்கப்பட்டமை, கல்வீச்சு தாக்குதல் நடாத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் நேற்று கைது செய்யப்பட்ட 130 பேரும் வவுனியா ,அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு மாற்றப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சந்தேக நபர்களை தடுத்து வைக்கும் அளவுக்கு இடம்போதமையால் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் வவுனியா ,அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.